FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சமூகநீதி: இஸ்லாமியப் பார்வை

'சமூக நீதி: இஸ்லாமியப் பார்வை' எனும் இந்த நூலை தனக்கே உரித்தான தனித்துவப் பாணியில் பன்னூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அளித்துள்ளார்.

2 நவம்பர் 2026, 7:29 pm
பகிர்:

சமூகநீதி: இஸ்லாமியப் பார்வை - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்; பக்.112; ரூ.120; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை-12. ✆ 044-26624401.

சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று துறைகளிலும் நீதி நிலைநாட்டப்பட்டால்தான் முழுமையான சமூக நீதியாகும்.

சமூக நீதி என்ற கருத்தியலில் உலகம் முழுவதும் உள்ள வெவ்வேறு பார்வைகளையும், பலவகை அநீதிகளை அகற்ற இஸ்லாம் கூறும் சமூக நீதியையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.

Advertisement

Advertisement

சமூகத்தில் சரிபாதியாக வாழும் பெண்களுக்கு நீதி இல்லை என்றால் சமூக நீதி இல்லை என்று மாதர் நீதியையும், சமத்துவம், சம மரியாதை, சம வாய்ப்புகள், ஒடுக்கப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோருக்கான நீதியையும் இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.

சமூக நீதி என்பது பிறருக்காக நாம் செய்யும் ஓர் உதவி அல்ல; அது ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் செலுத்த வேண்டிய ஓர் அறக் கடன். அந்தக் கடனை உணர்ந்து வாழும் இடத்தில்தான் உண்மையான மனித சமூகம் பிறக்கிறது.

நீதி நிலை பெறும் இடத்தில் மனித நேயம் மலர்கிறது; மனித நேயம் மலரும் இடத்தில் சமூகம் உயர்கிறது. அந்த உயர்வின் பாதையில் இஸ்லாம் காட்டும் சமூக நீதி ஒரு விளக்காக மட்டுமல்ல - வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்கிறது.

இத்தகைய அரிய கருத்துகளை ஒருங்கிணைத்து, அவற்றில் இருந்து மானுடம் பெற வேண்டிய வாழ்வியல் படிப்பினைகளைத் தெளிவாகவும், எளிமையாகவும், ஆழ்ந்த சிந்தனையுடனும் 'சமூக நீதி: இஸ்லாமியப் பார்வை' எனும் இந்த நூலை தனக்கே உரித்தான தனித்துவப் பாணியில் பன்னூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments