FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதிய பார்வை

மனித வள நிர்வாகம் குறித்து திருக்குறளை புதிய பார்வையில் விளக்குகிறது இந்த நூல்.

19 அக்டோபர் 2026, 3:09 pm IST
பகிர்:

புதிய பார்வை - வெற்றிக்கு 100 குறள்- சோம. வள்ளியப்பன்; பக்.224; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014. ✆ 044-4200 9603.

'திருக்குறள் குறித்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நமக்குப் படிக்க கிடைக்கின்றன. ஆயினும், ஏன் இன்னொரு புத்தகம்?' என்று முன்னுரையில் நூலாசிரியரே கேள்வி எழுப்பி, தனது நூல்மூலம் அதற்கு பதில் அளிக்கிறார்.

மனித வள நிர்வாகம் குறித்து திருக்குறளை புதிய பார்வையில் விளக்குகிறது இந்த நூல்.

Advertisement

Advertisement

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், ஊழியர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்கள் என சமூகத்தின் பல்வேறு தளங்களில் இயங்குபவர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் வகையில் நூறு குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து மாறுபட்ட முறையில் இந்த நூல் விவரிக்கிறது.

ஒரு நிறுவனத்துக்கு ஊழியர்களைத் தேர்வு செய்வது, அவர்களைப் பணியில் ஊக்குவிப்பது, அவர்களின் பணியில் இலக்கு நிர்ணயிப்பது, பணியாளர் திறனை மதிப்பீடு செய்வது, திறன் மேம்பாடு, உணர்வு மேலாண்மை, நேர மேலாண்மை,

உற்பத்தித் திறன் அதிகரிப்பு போன்ற பல விஷயங்கள் குறித்தும் திருக்குறள் வழிகாட்டும் வகையில் உள்ளதாக இந்நூல் அலசுகிறது.

வெறும் போதனைகளாக இல்லாமல், குறளில் கூறியுள்ள கருத்துகளின் நடைமுறைப் பலன்கள் என்னென்ன என்பதைப் பொருத்தமான நிகழ்வுகளையும் செய்திகளையும் கொண்டு விளக்கியுள்ளார். திரைப்படம், நாடகம் என ஜனரஞ்சகமான எடுத்துக்காட்டுகளும் இதில் உண்டு.

நீதி, சமூகம், ஒழுக்கம், ஊக்கம், மேலாண்மை, விருந்தோம்பல் உள்ளிட்ட கருத்துகளில் குறள் வழியாக என்ன கற்றுக் கொள்ளலாம் என்று நாம் ஏற்கெனவே பலர் கூறிக் கேட்டறிந்திருந்தாலும் தற்காலச் செய்திகளுடன் புதிய கண்ணோட்டத்தில் இந்த நூலில் விளக்கி இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments