FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீரத்துறவி இராம.கோபாலன்... எண்ணங்களும்

தமிழக அரசியல் வரலாற்றை ஒரு பார்வையில் மட்டுமே படித்து வந்த நமக்கு, மற்றொரு பக்கத்தின் முதல்நிலை ஆவணமாக விளங்குகிறது இந்த நூல்.

12 அக்டோபர் 2026, 6:01 pm IST
பகிர்:

வீரத்துறவி இராம.கோபாலன்... எண்ணங்களும், எழுத்துகளும்... (1949 முதல் 1980 வரை) -க.பக்தன், பக். 304; ரூ. 600; பசுத்தாய் பதிப்பகம்; சென்னை -600 002. ✆ 98407-47694.

தமிழக அரசியல் வரலாற்றை ஒரு பார்வையில் மட்டுமே படித்து வந்த நமக்கு, மற்றொரு பக்கத்தின் முதல்நிலை ஆவணமாக விளங்குகிறது இந்த நூல்.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம. கோபாலன் தனது 73 ஆண்டு கால பொது வாழ்க்கையில் பல ஆயிரம் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

இதில், தியாக பூமி பத்திரிகையில் 1949 தொடங்கி அதன் மறுவடிவமான விஜயபாரதம் பத்திரிகையில் 1980 வரை வெளியான கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை தயாரித்துள்ளார் நூலாசிரியர் க. பக்தன். அந்தக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் 121 கட்டுரைகளாக இந்த நூலில் எளிய நடையில் அழகுற தொகுக்கப்பட்டுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சி தடை, காஷ்மீர் பிரச்னை, நேரு -லியாகத் உடன்பாடு, சீனப் பஞ்சம், சமஸ்தானங்கள் இணைந்த வரலாறு, அந்நிய தேச உதவிகள், மொழிச் சண்டை போன்ற 1950-இல் இந்தியா சந்தித்த பிரச்னைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், தமிழக அரசியல், கலாசாரம், சர்தார் படேல்- ஸ்ரீகுருஜி சந்திப்பு, ஆவடி முதல் அமிருதசரஸ் வரை ஹிந்துக்கள் நிலை போன்ற ஆவணங்களும் இதில் உள்ளன.

பாகிஸ்தான் போர் நிறுத்தம், பங்களாதேஷ் போர், உலக ஹிந்து மாநாடு, இந்திரா காந்தி ஆட்சி குறித்தும், வகுப்புக் கலவரங்கள் ஏன்?, அஸ்ஸôம் வடகிழக்கு மாநிலங்களின் நிலை போன்ற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

எளிமையான தமிழில், அந்தக் காலத்தில் நிகழ்ந்தவற்றை தற்போது நாம் கண் முன்னே காணும் வகையில் எளிய நடையில் அமைத்திருப்பது சுவாரஸ்யம்.

தமிழக, தேசிய வரலாற்றை ஒரே கோணத்தில் பார்க்காமல், மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments