இயற்கை வாழ்வியல்
இயல்பான முறையில் வாழ்க்கையை நடத்தவும், கூடியமட்டும் நோய்களைத் தவிர்க்கவும் உதவுகிற அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து தந்துள்ளார் நுலாசிரியர்.
இயற்கை வாழ்வியல்- டாக்டர் ஆர்.கீர்த்தனா; பக். 170; ரூ. 200; மல்லிகை பிரசுரம், சென்னை-600 024. ✆ 75501 83899.
இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கானதா, நாம்தான் அதை நடத்துகிறோமா, அல்லது வேறு யாராவது நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு இயந்திரத் தனமாக மாறியுள்ளது. இத்தகைய சூழலில், இயல்பான முறையில் வாழ்க்கையை நடத்தவும், கூடியமட்டும் நோய்களைத் தவிர்க்கவும் உதவுகிற அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து தந்துள்ளார் நுலாசிரியர். இது பெண்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இதை ஆண்களும் கடைப்பிடிக்கலாம். தடையில்லை.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது முதல் இரவு படுக்கும்வரை எப்படி வாழலாம், எப்படி வாழ வேண்டும், எது சரியான முறை, இதனால் என்ன நன்மை என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை வாழ்க்கைமுறைக்கு உடனடியாக திரும்ப முடியாவிட்டாலும் அதற்கான முயற்சி அதற்குரிய பலனைத் தரும் என்று ஆறுதலாக கூறியிருக்கிறார்.
Advertisement
Advertisement
நம் உணவு முறை, காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் இவற்றின் உதவியுடன் கொஞ்சம் யோகா போன்ற உடற்பயிற்சிகளையும் சிறுமியர், பூப்பெய்தும் வயதில் உள்ள வளரிளம் பருவத்தினர், திருமணம் எதிர்நோக்கும் பெண்கள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் பெண்கள் என பல விதமாகப் பிரித்து, மருத்துவ ஆலோசனை மற்றும் வாழ்க்கை முறைகளைப் பட்டியிலிட்டுள்ளார்.
குறிப்பாக, பெண்கள் அதிகம் கவலைப்படுகிற பிரச்னைகள்- அதாவது முடி உதிர்தல், முகப்பரு, மாதவிடாய் ரத்தப்போக்கு, பேறுகாலம் முடிந்த பிறகு நீங்காத வயிற்றுக் கோடுகள் மட்டுமின்றி, எந்த வயது பெண்ணாக இருந்தாலும் தனக்கான பிரச்னைக்கு இந்த புத்தகத்தில் ஓர் ஆலோசனை கிடைப்பது நிச்சயம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.