FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கர்மாவும் வாழ்வியல் அனுபவங்களும்

மருத்துவத் துறையில் பங்களிப்பும், உலக இலக்கியங்களின் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் சிந்திக்க வைப்பதுடன், பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன.

12 அக்டோபர் 2026, 6:09 pm IST
பகிர்:

கர்மாவும் வாழ்வியல் அனுபவங்களும்- அகிலா ஜ்வாலா; பக். 186; ரூ. 200; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட், பெங்களூரு. ✆ 74185 55884.

பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான நூலாசிரியர் எழுதிய மூன்றாவது நூல் என்றாலும் கர்மா, தன்னம்பிக்கை, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், ஆன்மிகம் உள்ளிட்ட பல துறைகளையும் சேர்த்து முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளாக அளித்து, பல நூல்களை வாசிக்கும் உணர்வை அளித்துள்ளார்.

'கர்மா' என்றால் என்ன?, அதை முழுமையாக அறிவதும் உணர்வதும் எப்படி? என்பதை எளிய நடையிலான கட்டுரைகளில் விளக்கும் நூலாசிரியர் அனைத்து மதத்தின் பார்வையிலும், பிற நாட்டு கலாசாரங்களில் கூறப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்து சாமானியர்களுக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். 'கர்மா என்பது மத நம்பிக்கை மட்டுமல்ல; அது மனித வாழ்க்கையை ஒழுக்கத்துடனும், பொறுப்புடனும் நடத்த உதவும் முக்கியமான தத்துவம்' என்கிறார் அவர்.

Advertisement

Advertisement

மகான்கள் பார்வையில் கர்மா, கர்மா சிந்தனைகள், மத நூல்களில் கர்மா போன்ற கட்டுரைகளும், வள்ளுவர், பட்டினத்தார், திருமூலர், வள்ளலார் உள்ளிட்டோர் மனிதர்களுக்கு விளக்கிய தத்துவங்களும் சிந்திக்க வைக்கின்றன.

விசித்திர மனிதர்கள், விசித்திர நிகழ்வுகள், மனம் குறித்த தெளிவு, பிரபலங்களின் இறுதிக்கால வாழ்க்கை, வார்த்தைகளின் சக்தி, சமூக ஊடகங்களால் உறவுகளின் நட்புகளின் தாக்கம், மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?, புத்தக வாசிப்பின் அவசியம், ஆரோக்கியமாக வாழ ஆலோசனைகள், இளைய தலைமுறையினரின் சவால்களும் சாதனைகளும், செயற்கை நுண்ணறிவின் அவசியமும்

மருத்துவத் துறையில் பங்களிப்பும், உலக இலக்கியங்களின் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் சிந்திக்க வைப்பதுடன், பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments