பழம்பெரும் நடிகர் மனோஜ் குமாருக்கு தாதா சாகேப் பால்கே விருது!
திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகர் மனோஜ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகர் மனோஜ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படுபவர், தாதா சாகேப் பால்கே. அவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறை சாதனையாளர்களுக்கு பால்கே பெயரிலான விருது இந்திய அரசால் 1969 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2015-ம் வருடத்துக்கான தாதாசாஹிப் பால்கே விருது, மனோஜ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர், 1992-ல் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
சென்ற வருடம், பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.