தொலைக்காட்சியில் வெளியாகிறது பூமிகா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் பூமிகா.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் பூமிகா. கரோனா கட்டுப்பாடுகள் தளராத நிலையில் இப்படமும் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
திரில்லர் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் ' ஸ்டோன் பென்ச் ' நிறுவனம் தயாரிப்பில் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இப்படம் அதே நாளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியிடப்பட இருக்கிறது . மேலும் இது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவரும் 25 வது படம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
Advertisement
Advertisement