கலக்குறீங்க சகோ..! பிரதீப் ரங்கநாதனுக்கு விஜய் வாழ்த்து
விஜய்யுடன் பிரதீப் ரங்கநாதன்!
நடிகர் விஜய்யை இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சந்தித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாகதொரு அரசியல் கட்சியை தோற்றுவித்துள்ள விஜய் தமது கடைசி திரைப்படமாக அமையவுள்ள ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரை இன்று(மார்ச் 24) ‘டிராகன்’ திரைப்படக் குழுவினர் சந்தித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் விஜய் வெகுவாகப் பாராட்டியுள்ள நிலையில், அப்படத்தின் கதாநாயகனான பிரதீப், விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ரசிகர்களிடம் தான் மிகுந்த ஆனந்தமடைந்திருப்பதாகப் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் கூறியிருப்பதாவது : “விஜய் சார் என்னைப் பார்த்து ‘கலக்குறீங்க ப்ரோ’ என்று சொன்னார்... தளபதியிடமிருந்து இப்படி கேட்கும்போது, நீங்கள் எல்லோரும் நினைத்துப்பாருங்கள் நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை? எனக்கு அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் அனைவராலும் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கும் நேரம் ஒதுக்கி எங்களை சந்தித்ததற்கும் நன்றி சார். சச்சின் பட மறுவெளியீட்டுக்காகக் காத்திருக்கிரேன்” என்று பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார் டிராகன் நாயகன் பிரதீப்.
விஜய் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சச்சின் திரைப்படம் மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.