முகப்பு
சினிமா

நடிகை பாலியல் வன்கொடுமை: பிரபல நடிகரைத் தீவிரமாகத் தேடி வரும் மும்பை போலீஸ்!

ஹிந்தி நடிகர் ஏஜாஸ் கான் கைதாகிறார்...

Updated On : 5 மே 2025, 10:51 pm IST
ஏஜாஸ் கான் - படம் | ஏஜாஸ் கான் பதிவு
பகிர்:

மும்பை: நடிகையொருவருக்கு சினிமாவில் வாய்ப்பளிப்பதாக வாக்குறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின்கீழ், நடிகர் ஏஜாஸ் கானை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஏஜாஸ் கானுக்கு சம்மன் காவல்துறையிடமிருந்து அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது அலைபேசி எண் மூலமாகவும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவரைக் கைது செய்து விசாரிக்க மும்பை காவல்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, தலைமறைவான நடிகர் ஏஜாஸ் கானை மும்பை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

ஆபாசம் நிறைந்த படங்களை பதிவிடும் பிரபல சமூக ஊடக வலைதளமொன்றில் நடிகர் ஏஜாஸ் கானின் ‘ஹவுஸ் ஃபுல்’ நிகழ்ச்சியில், எல்லை மீறிய ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, அவர் மீது, நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments