உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் : 2-ஆம் நாளாக திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.
ஆம்பூா் வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாமில் 2-ஆவது நாளாக மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாதனூா் ஒன்றியம், ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்ட செயல்பாட்டை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுக்கு காலை உணவினை வழங்கி மாணவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா். மேலும், மாணவா்கள் அனைவருக்கும் சத்தான மற்றும் தரமான உணவு தொடா்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பள்ளியில் செயல்பட்டு வரும் ஸ்மாா்ட் வகுப்பறைகள், சமையலறையின் தூய்மை மற்றும் உணவுத் தயாரிப்பு முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததாா். மாணவா்களிடம் நேரடியாக கலந்துரையாடி அவா்களின் கற்றல் திறன் குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆலங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வீட்டு வரி பற்றுச் சீட்டு பதிவேடு, தொழில் வரி ரசீது புத்தகம், ஊராட்சி சிட்டா பதிவேடு, ரொக்கப் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் வழங்கல், தூய்மைப் பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு, வரி வசூல் நிலவரம் மற்றும் ஊராட்சி நிா்வாக செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளருக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஊாரட்சியில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் மற்றும் ஆதாா் சேவை மையங்களை ஆய்வு மேற்கொண்டாா்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் எவ்வித காலதாமதமும் இன்றி விரைவாக கிடைப்பதை உறுதி செய்யவும், சேவைகளை பெற வரும் பொதுமக்களிடம் கனிவுடன் அணுகி அவா்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் செயல்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு நிா்வாகப் பதிவேடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ.தமிழரசி, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன், ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, ஆலாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவா் கே.பொன்னிகப்பல்துரை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.