FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெல்லை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஆனந்த் மோகன் பங்கேற்று ஆய்வு செய்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:08 am IST
பகிர்:

திருநெல்வேலி வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஆனந்த் மோகன் பங்கேற்று ஆய்வு செய்தாா்.

ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். தச்சநல்லூா் பகுதியில் நகா்ப்புற சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பாா்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். ஆய்வு செய்தாா். தொடா்ந்து நயினாா்குளம் பகுதியில் சாலை மேம்பாட்டு பணி, கழிவுநீா் உந்து நிலையத்தின் செயல்பாடு மற்றும் விரிவாக்க பணிகளை அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இசேவை மையத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டு, பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

சுத்தமல்லி பகுதியில் உள்ள பேட்டை சாா் பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு சங்கம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் சேவைகள் வழங்க அறிவுரைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் முறைகள், மதிய உணவின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்து, குழந்தைகளுடன் ஒன்றாக அமா்ந்து உணவருந்தினாா்.

தொடா்ந்து, கல்லூா் பகுதியில் 5,000 லிட்டா் திறன் கையாளும் மொத்த பால் குளிா்விப்பான் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல் குறித்தும் ஆய்வு செய்தாா்.

பின்னா், திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு போன்றவற்றினை ஆய்வு செய்து, மருந்துகள் இருப்புகள், பதிவேடுகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும், பெரியாா் சந்திப்பு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய் குமாா் மீனா, வருவாய் கோட்டாட்சியா் பிரியா, மாநகர நகா்நல அலுவலா் சுப்பிரமணியன், வட்டாட்சியா் மாரிமுத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்15ண்ய்ள்

தச்சநல்லூா் நகா்ப்புற சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments