FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தேனியில் நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாமில் 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 16 ஜூலை 2026, 1:41 am IST
பகிர்:

தேனியில் நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாமில் 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபற்ற இந்த முகாமில் ஆட்சியா் தலைமை வகித்து, இ சேவை மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், மாவட்ட மைய நூலகத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இதே போல, பல்வேறு துறைகளிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது 465 மனுக்கள் பெறப்பட்டன. 10 பயனாளிகளுக்கு வருவாய்த் துறை மூலம் முழுப் புலத்துக்கான பட்டா ஆணைகளையும்

ஆட்சியா் வழங்கினாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கவிதா, தேனி வட்டாட்சியா் ரத்தினம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments