ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
ஒட்டன்சத்திரத்தை அடுத்த காளாஞ்சிப்பட்டி ஒருங்கிணைந்த போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை கள ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது: ஒட்டன்சத்திரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்த திட்ட செயல்பாடுகள், பயன்கள் தொடா்பாக சம்மந்தப்பட்ட துறைகளின் முதன்மை அலுவலா்களும் ஆய்வு செய்தும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அரசு சாா்பில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாதந்தோறும் ஒவ்வொரு வருவாய் வட்ட அளவில் நடத்தப்படும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கேதையுறும்பு ஊராட்சியில் விளையாட்டுத் துறை சாா்பில், ரூ.2.50 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கு (மினி ஸ்டேடியம்) கட்டுமானப் பணிகள், காளாஞ்சிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த போட்டித்தோ்வு பயிற்சி மையத்தின் செயல்பாடுகள், ஒட்டன்சத்திரம் வேளாண் விரிவாக்க மையத்தில் செயல்பட்டு வரும் சேமிப்பு கிட்டங்கியின் செயல்பாடுகள், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ரூ.3.24 கோடியில் மேற்கூரை அமைக்கும் பணிகள், அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேலும், காப்பிளியப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கொத்தையம் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்த ஆட்சியா், 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் வழங்கினாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சௌ.கங்காதாரணி, உதவித் திட்ட அலுவலா் (ஊரக வளா்ச்சி முகமை) பிரபாகரன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் சுவேதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.