முகப்பு
சினிமா

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ஆரவ்!

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நடிகர் ஆரவ்வை பற்றி...

Updated On : 31 அக்டோபர் 2025, 6:07 pm IST
ஆரவ்.
பகிர்:

நடிகர் ஆரவ் புதிய படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் பரவலாக அறியப்பட்ட நடிகர் ஆரவ், அந்தத் தொடரின் முதல் சீசனில் வெற்றியாளரானார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் கலகத் தலைவன் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்த ஆரவ், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து கவனம்பெற்றார். இவர் தற்போது புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும், அங்கீகாரமும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு இந்த பெருமைமிகு அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் என்னை மாற்றியுள்ளது.

இப்போது இந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "AARAV STUDIOS"-ன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின் மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்து உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டில் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும் இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்களின் AARAV STUDIOS மூலம் இத்திரைப் பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Aarav announces his production house Aarav Studios

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments