FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

18 வயதில் நடிகைக்கு நேர்ந்த சோகம்... ‘காட்ஸில்லா’ படத்தின் புகழ் கெய்லி கார் விபத்தில் பலி!

காங் vs காட்ஸில்லா படத்தில் நடித்து பிரபலமான நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் பலியானதைப் பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 11:56 am IST
கெய்லி ஹாட்டில்
பகிர்:

பிரபல நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் பலியான சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'காட்ஸிலா வெர்சஸ் காங் (2021)' மற்றும் 'காட்ஸிலா எக்ஸ் காங்: தி நியூ எம்பயர் (2024)' ஆகிய படங்களில் ஜியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் கெய்லி ஹாட்டில்(18).

காதுகேளாதவரான கெய்லி ஹாட்டில் நேற்று அமெரிக்காவின் மேரிலாந்தின் ஃபிரடெரிக் நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது, இவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் நடிகை கெய்லி ஹாட்டில் பரிதாபமாக பலியானார்.

Advertisement

Advertisement

விபத்து நடத்தவுடன் அவரை மீட்ட அவசர உதவிப்பணியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

கெய்லி ஹாட்டிலின் மரணத்தை உறுதி செய்த அவரது அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில், முகநூல் நேரலையில் சைகை மொழியில் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

இந்த விபத்து நேரிட்டது எப்படி என்பது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும், கார் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்தில் பலியான நடிகை கெய்லி ஹாட்டிலின் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

summary

Kaylee Hottle, the deaf actor best known for playing Jia in Godzilla vs Kong and Godzilla x Kong: The New Empire, has died. She was 18.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments