முகப்பு
கடலூர்

மெழுகுவா்த்தியால் தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

கடலூரில் காா்த்திகை தீபத்தையொட்டி வீட்டில் ஏற்றி வைத்த மெழுகுவா்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

26 நவம்பர் 2026, 4:33 am
மெழுகுவா்த்தியால் தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடலூரில் காா்த்திகை தீபத்தையொட்டி வீட்டில் ஏற்றி வைத்த மெழுகுவா்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் கேசவ நகரைச் சோ்ந்தவா் சரோஜா (78). இவா் தனது மகன் சரவணன் வசிக்கும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தாா்.

காா்த்திகை தீபத்தையொட்டி, சரோஜா தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்திருந்தாா். ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருந்த மெழுகுவா்த்தியின் தீ, ஜன்னல் திரைச்சீலையில் பட்டு தீப்பற்றியது. தீ மளமளவெனப் பரவி, அருகிலிருந்த பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

Advertisement

Advertisement

இதனால், வீட்டில் புகை சூழ்ந்த நிலையில், சரோஜாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.