முகப்பு

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘கூடு’

தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘கூடு’
பகிர்:

தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாக அறியப்படுவது கோவா சர்வதேச திரைப்பட விழா. இந்தாண்டு நவம்பர் 20 முதல் 28 வரை இந்த திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இத்திரைப்பட விழாவில் ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிட தமிழ்த் திரைப்படமான கூடு தேர்வாகியுள்ளது. இந்த ஆண்டு இப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.

VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கிராமம் ஒன்றில் அரிய வகை பறவைகள் மின்மாற்றி (Transformer) ஒன்றிற்குள் கூடு கட்டும்போது, அந்தக் கிராம மக்கள் எடுத்த நடவடிக்கையை மையமிட்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஜோயல் விஜய் இயக்கியுள்ளார். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். டேவிட் வில்லியம்ஸ் கதையை எழுதியுள்ளார். பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

summary

The Tamil film ‘Koodu’ has been selected for screening in the prestigious ‘Cala Premiere Feature Film’ section at the 57th International Film Festival of India, to be held in Goa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.