முகப்பு
செய்திகள்

பாகுபலி 2 சாதனைகளைத் தகர்த்து, ரூ. 1700 கோடி வசூலித்துள்ள அமீர் கானின் டங்கல்!

பாகுபலி 2-வின் வசூலைத் தாண்டி அதிக வசூல் கண்ட இந்தியப் படம் என்கிற பெருமையையும் அடைந்துள்ளது.

Updated On : 31 மே 2017, 3:21 pm IST
பகிர்:

அமீர்கானின் டங்கல் படம் சீனாவில் அசுர சாதனை செய்துவருகிறது. அங்கு மட்டுமே விரைவில் ரூ. 1000 கோடி வசூலை அடைய உள்ளது. இதனுடன் பாகுபலி 2 வசூலையும் தாண்டி நெ.1 இடத்தைப் பிடித்துள்ளது.  

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

டங்கல் படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500).  டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் சீனாவில் வெளியானது. 

Advertisement

Advertisement

சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், இதுவரை ரூ. 942 கோடி சம்பாதித்துள்ளது. சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், தற்போது பிகே படத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்கிற சூழலை உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில் டங்கல் படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ. 1700 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வசூலைக் கண்ட முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை டங்கல் பெற்றுள்ளது.

இதுவரை சீனாவில் ரூ. 942 கோடி, தைவான் - ரூ. 32 கோடி, இந்தியா உள்ளிட்ட இதரப் பகுதிகள் - ரூ. 745 கோடி என ஒட்டுமொத்தமாக ரூ. 1719 கோடி வசூல் பெற்று மகத்தான சாதனை புரிந்துள்ளது டங்கல் படம். இதையடுத்து பாகுபலி 2-வின் வசூலைத் தாண்டி அதிக வசூல் கண்ட இந்தியப் படம் என்கிற பெருமையையும் அடைந்துள்ளது. 

முதல்முதலாக ரூ. 1500 கோடி வசூலித்த இந்தியப் படமான பாகுபலி 2, இன்னும் சீனாவில் வெளியாகவில்லை. அப்படி வெளியாகும் பட்சத்தில் அதன் ஒட்டுமொத்த வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments