இந்தியாவின் விரும்பத்தக்க ஆண்கள் ‘டாப் 10’ பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகர்!
பாகுபலி ஸ்டார்களான பிராபாஸும், ராணாவும் டாப் 10 ல் இடம் பெறாதது அவர்களது ரசிகர்களை ஓரளவு வருத்தத்தில் ஆழ்த்தலாம். ஏனெனில் ‘பாகுபலி தி கன்குளூசன்’ வெளியான பின் இந்தியா முழுவதிலுமே பிரபாஸ் மற்றும்
‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் 50 விரும்பத்தக்க ஆண்கள் தர வரிசைப் பட்டியலில் டாப் 10 லிஸ்டில் இடம் பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகர் மகேஷ் பாபு மட்டுமே. டைம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மகேஷ் பாபு 7 ஆம் இடம் பெற்றுள்ளார். இந்த இடத்தைப் பிடிக்க மகேஷ்... ரன்பீர் கபூர், ஜான் ஆப்ரஹாம், எம்.எஸ். தோனி, தனுஷ் உள்ளிட்டோரைப் பின்னுக்குத் தள்ள வேண்டியதாக இருந்தது. மேற்கண்ட மூவரும் அந்தப் பட்டியலில் முறையே 12, 16, 26 ஆம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
பாகுபலி ஸ்டார்களான பிராபாஸும், ராணாவும் டாப் 10 ல் இடம் பெறாதது அவர்களது ரசிகர்களை ஓரளவு வருத்தத்தில் ஆழ்த்தலாம். ஏனெனில் ‘பாகுபலி தி கன்குளூசன்’ வெளியான பின் இந்தியா முழுவதிலுமே பிரபாஸ் மற்றும் ராணாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அபிரிமிதமாக அதிகரித்திருப்பதாக நம்பப் பட்டு வந்த சூழலில் அவர்களால் டாப் 10 ல் இடம் பெற முடியாமை ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. டைம் பட்டியலில் பிரபாஸ் 22 ஆம் இடத்தையும், ராணா 22 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களது கடந்த ஆண்டைய தர வரிசைப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இவர்கள் டைம் பட்டியலில் பின்னடைந்திருக்கிறார்கள் என்றே கருதலாம்.
Related Article
கேரவன் கலாச்சாரத்தை கண்டு அதிசயிக்கும் நடிகை நிரோஷா!
Advertisement
Advertisement
ரங்கஸ்தலம் 85: டோலிவுட்டைப் பற்றிக் கொண்ட பீரியட் ஃபிலிம் மோகம்!
நமீதா, கணேஷ் வெங்கட்ராம் உட்பட 'பிக் பாஸ்' பங்கேற்பாளர்கள் லிஸ்ட்!
புத்தம் புது ஹீரோக்களாகவிருக்கும் இரண்டு வாரிசு நடிகர்கள்!
இளம் நடிகர்களின் ‘பவுன்சர் கலாசாரத்தை’ விளாசும் பழம்பெரும் நடிகை ஜமுனா!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.