பழம்பெரும் நடிகர் ஆர்.என். சுதர்சன் காலமானார்!
250 படங்களில் நடித்துள்ள சுதர்சன், 21 வயதில் 1961-ல் தந்தையின் இயக்கத்தில் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார்...
பாயும்புலி, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆர்.என். சுதர்சன் பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருகு வயது 78.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
1939-ம் ஆண்டு பிறந்த சுதர்சன், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சனின் தந்தை நாகேந்திர ராவ், கன்னடத் திரையுலகின் பிரபல இயக்குநர். சுதர்சனின் சகோதரர்களும் திரைத்துறையில் பணியாற்றியவர்கள். 2008-ல் மறைந்த ஜெயகோபால் கன்னடத் திரையுலகில் பாடலாசியராகவும் 2012-ல் மறைந்த மற்றொரு சகோதரர் பிரசாத் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
250 படங்களில் நடித்துள்ள சுதர்சன், 21 வயதில் 1961-ல் தந்தையின் இயக்கத்தில் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு சைலாஸ்ரீ என்கிற மனைவி உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.