FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் ரூ. 4 கோடி மட்டுமே பெற்றேன். மேற்கொண்டு படத்தைத் தயாரிக்க அந்த நிறுவனம் முன்வரவில்லை. எனவே...

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், மர்மயோகி' என்ற படத்தைத் தயாரிப்பது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ரூ.100 கோடியில் தயாரிக்கத் திட்டமிட்டு, தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும், படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் மர்மயோகி' படத்தை தயாரிக்காமல் உன்னைப் போல் ஒருவன்' படத்தை எடுத்தார். இதனையடுத்து மர்மயோகி' படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக கொடுத்த ரூ.6.90 கோடியைத் திரும்ப தரக் கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் விஸ்வரூபம்-2' படத்தை வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, மர்மயோகி' படத்துக்காக அவருக்கு கொடுத்த ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக வழங்காமல் விஸ்வரூபம்-2 படத்தை நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கமல் தனது விளக்கத்தில், பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் ரூ. 4 கோடி மட்டுமே பெற்றேன். மேற்கொண்டு படத்தைத் தயாரிக்க அந்த நிறுவனம் முன்வரவில்லை. எனவே வேறு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவேன் எனப் பதில் அளித்திருந்தார். இதையடுத்து, விஸ்வரூபம்-2 படத்துக்குத் தடை விதிக்கக் கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து விஸ்வரூபம் 2 படம் நாளை வெளியாகவுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments