முகப்பு
செய்திகள்

அடுத்தடுத்து வரவிருக்கிற அட்டகாசமான படங்கள்! சூப்பர் ஹிட்டாகுமா? 

முன்பெல்லாம் படங்கள் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும். இப்போது என்னவோ ஒரே வாரத்தில் படம் தியேட்டரை விட்டு ஓடுவிடுகிறது.

Updated On : 17 ஜூலை, 2018 at 1:06 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM

முன்பெல்லாம் படங்கள் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும். இப்போது என்னவோ ஒரே வாரத்தில் படமே தியேட்டரை விட்டு ஓடிவிடுகிறது. கதைப் பஞ்சம், தலைப்பு பஞ்சம் என கோலிவுட்டில் வறட்சி நிலை நீடிக்கிறது. இந்த 2018-ம் ஆண்டில் ஏனோ இதுவரை ஒரு படம் கூட மெகா ஹிட்டாகியிருக்கவில்லை. ஒரே ஷோவில் அந்தப் படத்தைப் பற்றி அக்கு வேறாக ஆணி வேறாக அலசித் தள்ளுகிறார்கள் வலையுலக விமரிசகர்கள். இதையெல்லாம் தாண்டி, ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்றால் அந்தப் படக்குழுவினரின் உழைப்பும் அதிர்ஷ்டமும் தான்.

சாமி 2, கொரில்லா, இமைக்கா நொடிகள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய நான்கு படங்களும்தான் தற்போது கோலிவுட்டில் அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் படங்கள். இவை எல்லாமே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் உள்ள படங்கள் எனலாம். 

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா. பிரபு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சாமி 2. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். சாமி ஸ்கொயர் என்று பரவலாக அழைக்கப்படும் சாமி 2, முதல் பாகத்தைப் போல பரபரப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்களும் பட ரிலீஸ் குறித்த மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடிப்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உள்ளது. 

Advertisement

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள த்ரில்லர் ஜானர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. யூட்யூப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி வைரலாகிக் கொண்டிருக்க, படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். தனுஷ் - மேகா ஆகாஷ் ஜோடியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் வெகு அழகு என நெட்டிசன்கள் ஏற்கனவே எழுதி வருகின்றனர். 

கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் த்ரில்லர் ஜானரில் அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள் எனும் படத்தை இயக்கியுள்ளார். அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில், சைக்கோ வில்லனாக ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் மிரண்டுவிட்டனர். பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது. எதிர்பாராத திருப்பங்கள் பல உள்ள படமிது என்று கூறுகின்றனர் படக்குழுவினர். கோலிவுட்டே எதிர்ப்பார்க்கும் படமிது எனலாம்.

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள கொரில்லா எனும் படமும் வெளி வரவிருக்கிறது. இந்த படத்தில் ராதாரவி, சதீஷ், ராஜேந்திரன், யோகி பாபு, அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு சிம்பன்ஸி குரங்கும் நடித்துள்ளது. முழுநீள தமிழ்ப்படத்தில் ஒரு சிம்பன்ஸி குரங்கு நடித்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா படம் வெளிவருகிறது என்பதால் அவரது ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.