முகப்பு
செய்திகள்

ரஜினி நடித்த காலா வெற்றிப் படமா தோல்விப் படமா? பா.ரஞ்சித் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. 

Updated On : 18 ஜூன் 2018, 4:32 pm IST
பகிர்:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. 

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டீல், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலாவுக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. 

காலா சென்னையில் மட்டும் முதல் நாளன்று ரூ. 1.76 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த ஒரு வருடமாக இரு படங்கள் சென்னையில் முதல் நாளன்று அதிக வசூலை எட்டின. ஆகஸ்ட் 24 அன்று வெளியான அஜித் நடித்த விவேகம் படத்தின் முதல் நாள் சென்னை வசூல் - ரூ. 1.21 கோடி. பிறகு தீபாவளி சமயத்தில் வெளியான விஜய் நடித்த மெர்சல் படம் சென்னையில் முதல் நாளன்று ரூ. 1.52 கோடியை அள்ளியது. இந்நிலையில் தற்போது டிக்கெட் விலை அதிகமானதாலும் ரசிகர்களின் அதிக வரவேற்பினாலும் அவ்விரு படங்களின் வசூலைத் தாண்டியுள்ளது காலா படம். இந்தப் படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.76 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.12 கோடி வசூலித்தது.

Advertisement

Advertisement

காலாவுக்கு நிகராக சென்னையில் முதல் நாளன்று வேறு எந்தப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை. இந்தப் புள்ளி விவரம் காலா படத்துக்கும் ரஜினி - பா.ரஞ்சித் ஆகிய இருவருக்கும் பெருமை சேர்த்தது. எனினும் முதல் நாள் வசூலைத் தொடர்ந்து அதன்பின் படத்தின் வசூல் விபரங்கள் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

காலா திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றி நடை போடுகிறது என்றாலும் கடுமையான விமரிசனங்களையும் சந்தித்து வருகிறது. இது ரஜினி படமா ரஞ்சித் படமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் படத்தை புகழ்ந்து அனேகம் பேர் எழுதியிருந்தாலும், சிலர் காலா நஷ்டம் தான் என கூறி வருகின்றனர். ரஜினி ரசிகர்களிடையே காலா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மைதான்.

இது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது, ‘மற்ற ரஜினி படங்களை ஒப்பிடும் போது காலா எடுத்ததே சிறிய பட்ஜெட்டில்தான், எனவே அந்த வகையில் தனுஷ் இப்படத்தை மினிமம் கேரண்டியில் விற்கவில்லை. எந்த விநியோகஸ்தர்களும் நஷ்டப்படக் கூடாது என்று குறைந்த விலைக்கு தான் விற்றோம். இப்படத்தின் வசூல் வழக்கத்தைவிடக் குறைவுதான் என்றாலும் யாருக்குமே நஷ்டம் இல்லை, சேலத்தில் ஒரு திரையரங்க உரிமையாளர் எங்களுக்கு இனிதான் லாபம் என்று குறிப்பிட்டிருக்கிறார், அவ்வகையில், காலா சந்தேகமின்றி வெற்றிப் படம் தான்’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments