FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்!

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் காலமானார்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் காலமானார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் வெள்ளை சுப்பையா. கோவை அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர். ஜெய்சங்கர் நடித்த மாணவன் என்கிற படத்தில் அறிமுகமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் மேகங்கருக்கையிலே பாடலை திரையில் பாடியது இவர்தான். பிறகு சமீபகாலமாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். 2014-ம் வருடம் தன்னுடைய புற்று நோய் சிகிச்சைக்கான செலவுக்கு அரசு உதவவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

உடல்நலக்குறைவின்றி இருந்த சுப்பையாவைக் கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்த்தார்கள். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி, நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 78. அவருக்கு சாவித்திரி என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளார்கள். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments