மெஹந்தியுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற புது மணப்பெண் சோனம் கபூர் (படங்கள்)
திருமணம் முடிந்த கையோடு சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுடன் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார். கடந்த சில ஆண்டுகளாக கேன்ஸ் திரைவிழாவின் முக்கிய அழைப்பாளர் சோனம் என்றால் மிகையில்லை.
மெஹந்தி அணிந்த நிலையில் கேன்ஸ் திரைவிழாவின் ரெட் கார்ப்பெட்டில் நடக்க சோனம் கபூரின் புகைப்படம் வைராலானது.
Advertisement
Advertisement
அழகான மெஹந்தி டிசைனுடன், சோனம் விரலில் அணிந்திருக்கும் கல்யாண மோதிரம் கவனிக்கப்பட்டது.
அந்த மோதிரத்தின் விலை 90 லட்சம் என்று ஒரு தகவலும் வைரலாகப் பரவி வருகிறது.
சோனம் கபூர் கழுத்தில் அணிந்திருந்த மாங்கல்யத்தில் அவருடைய நட்சத்திர குறியீட்டுடன் கணவரது நட்சத்திர குறியீட்டையும் சேர்த்து பொறித்து ஒரு டிசைன் செய்திருந்தார்.
முதல் நாள் ரெட் கார்பெட்டுக்கு டிசைனர் லெஹங்கா அணிந்து அசத்தினார் சோனம் கபூர். இந்த நிகழ்ச்சியில் அணிவதற்கென ரால்ஃப் அண்ட் ருசோ என்ற ஸ்டூடியோவில் இந்த ஆடையை வாங்கியிருக்கிறார் சோனம்.
இரண்டாவது ரெட் கார்பெட்டுக்கு வேரா வாங் என்றழைப்படும் இந்த ஸ்கின் கலர் ஆடை அணிந்து அசத்தினார் சோனம் கபூர்.
திருமணம் முடிந்த அடுத்த நாளே கேன்ஸ் விழாவுக்குக் கிளம்பியதால் தாலியை பத்திரமாக வைத்துள்ளார் புதுமணப் பெண் சோனம் கபூர்.{pagination-pagination}
சோனம் கபூரின் கேன்ஸ் புகைப்படங்கள் உலக மீடியாக்களின் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகின்றது.
சோனம் கபூரின் நகை மற்றும் சிகை அலங்காரமும் அனைவரின் பாராட்டையும் அள்ளிக் குவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.