FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புர்ஜ் கலிஃபாவில் இந்தியர்களுக்காக மின்னிய தீபாவளி வாழ்த்து!

தீபாவளி பண்டிகையையொட்டி உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் தீபாவளி வாழ்த்துகள் என்ற செய்தி ஒளிரவிடப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

புர்ஜ் கலிஃபாவில் தீபாவளி வாழ்த்துகள் - எக்ஸ்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் தீபாவளி வாழ்த்துகள் என்ற செய்தி ஒளிரவிடப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானதாக கருதப்படும் தீபாவளிக்கு புர்ஜ் கலிஃபாவில் வாழ்த்து கூறி ஒளிரவிடப்பட்டதால், உலகளவிலான சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

துபையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்களும் தீபாவளி வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளைப் பரிமாறி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே துபையில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடத்தில் தீபாவளி வாழ்த்துகள் என்ற செய்தி ஒளிரவிடப்பட்டுள்ளது. உயரமான கட்டடத்தின் மீது லேசர் ஒளியில் தீபாவளி என்று தோன்றும்போது சுற்றுலாப் பயணிகள் பலர் கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

summary

Diwali greetings for Indians shine on the Burj Khalifa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.