90 ML ட்ரைலர் சர்ச்சை: நடிகை ஓவியா 'கூல்' பதில்
தான் நடித்துள்ள 90 ML பட ட்ரைலருக்கு சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.
சென்னை: தான் நடித்துள்ள 90 ML பட ட்ரைலருக்கு சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.
களவாணி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகியவர் ஓவியா. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் தோன்றினார்கள். 'ஓவியா ஆர்மி' உருவாகும் அளவிற்கு பிரலமாகிய ஓவியா நான்கைந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அவற்றில் 90 ML படமும் ஒன்று. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களைக் அதிகம் இருந்ததால் தணிக்கையில் "ஏ" சான்றிதழ் பெற்றுள்ளது. அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
ஹீரோயினை மையப்படுத்தி எடுத்த படம் என்பதால் 90 ML படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் ஓவியா. அந்த படத்தின் ட்ரைலர் வெள்ளியன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால் ட்ரைலரில் முகம் சுளிக்கும்படியான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதை அடுத்து, பெண்ணியவாதிகள் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 90 ML பட ட்ரைலருக்கு சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
'பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரைலரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.