FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘எனக்கு ஷங்கரிடம் சான்ஸ் கேக்குறியா?’: இளையராஜாவின் கோபம் குறித்து ரோஹிணி பதில்!

ரோஹிணி கேள்வி கேட்ட விதம் குறித்தும் ராஜாவின் கோபம் குறித்தும் பரவலான விமரிசனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்...

Updated On : 5 மார்ச் 2019, 2:18 pm IST
பகிர்:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய 'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், 'இளையராஜா -75' என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பால்கி உள்ளிட்ட பிரபலங்களும் திரையுலகினரும் ராஜா ரசிகர்களும் பெரும்திரளாக இந்த இருநாள் விழாவில் கலந்துகொண்டார்கள். 

இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிய ரோஹிணியை இளையராஜா ஒரு தருணத்தில் கடிந்துகொண்டார். 

இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜாவைப் பாராட்ட மேடைக்கு வந்தார் இயக்குநர் ஷங்கர். அப்போது அவரிடம் ரோஹிணி, நீங்களும் ராஜா சாரும் மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட கூட்டணியைப் பார்க்க நிறைய பேர் ஆவலா இருக்காங்க என்றார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட இளையராஜா, நீ எனக்கு சான்ஸ் கேக்கறியா என்று கடிந்துகொண்டார். அப்படி இல்லை என்று சமாளித்தார் ரோஹிணி. பிறகு ரோஹிணியிடம் ராஜா கூறியதாவது:

Advertisement

Advertisement

ஐ டோண்ட் லைக் திஸ்...  இப்ப ஏன் அந்த மேட்டரை எடுக்குற நீ? அவருக்குச் செளகரியமானவர்களை வைத்து அவர் வேலை பார்த்துட்டு இருக்கார். அவரைப் போய் ஏன் தொந்தரவு செய்றே என்று கோபமாகவும் படபடவென்றும் பேசினார். 

இந்தச் சம்பவம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து ரோஹிணி கேள்வி கேட்ட விதம் குறித்தும் ராஜாவின் கோபம் குறித்தும் பரவலான விமரிசனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை ரோஹிணி ட்விட்டரில் எழுதியதாவது:

இளையராஜா என்னிடம் பேசிய விதம் குறித்துப் பேசும் அனைவருக்கும் - இது ஒரு பெரிய விஷயமில்லை, இதை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments