அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை: வனத்துறை தரப்பில் விளக்கம்
அஜித் வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக...
நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக வெளியான தகவலையடுத்து, சென்னை திருவான்மியூரில் உள்ள அஜித்துக்குச் சொந்தமான வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அஜித்தின் வீட்டுக்கு சென்று சுரேஷ் சந்திரா குறித்து விசாரித்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பு குறித்தும் சோதனை செய்ததாக வெளியான செய்தியால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வனத்துறை தரப்பில் இந்தத் தகவல் பொய்யானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா, மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாகத் தகவல் வந்தது. ஆனால் அதுபற்றி வழக்குப் பதிவோ விசாரணையோ செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.