FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிஷ்கின் - அருண் விஜய் கூட்டணியில் அஞ்சாதே 2?

2008-ல் வெளியான இந்தப் படத்தில் நரேன், பிரசன்னா, அஜமல், விஜயலட்சுமி போன்றோர் நடித்திருந்தார்கள்.

27 ஜனவரி 2024, 10:10 pm
பகிர்:

மிஷ்கின் இயக்கிய படங்களில் இன்றைக்கும் பலருக்கும் பிடித்த படம் - அஞ்சாதே தான்.

2008-ல் வெளியான இந்தப் படத்தில் நரேன், பிரசன்னா, அஜமல், விஜயலட்சுமி போன்றோர் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் அஞ்சாதே படத்தின் அடுத்த பாகத்தை இயக்கத் தயாராகிவிட்டார் மிஷ்கின்.

Advertisement

Advertisement

சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அஞ்சாதே 2 படத்தை அடுத்ததாக இயக்க முடிவெடுத்துள்ளார் மிஷ்கின். அஞ்சாதே படத்தின் ரசிகரான சிம்பு இப்படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துமுடித்துக் கொடுக்க வேண்டிய நிலைமையில் சிம்பு உள்ளதால் அஞ்சாதே 2 படத்தின் கதாநாயகனாக அருண் விஜய் தேர்வாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிஷ்கின் - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் அஞ்சாதே 2 படம் பற்றிய அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.