சில்ஹெட் டெஸ்ட்டில் சதத்தை நோக்கி ஆமிர் ஜாங்கோ..! வலுவான நிலையில் மே.இ. தீவுகள்!
வங்கதேசம் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து...
வங்கதேசம் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட் திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தற்போது, 60 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கெவின் விக்ஹாம் அரைசதம் அடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
விக்கெட் கீப்பர் ஆமிர் ஜாங்கோ அரைசதம் கடந்து, 94* ரன்களுடன் விளையாடி வருகிறார். இவருடன் ஜஸ்டின் கிரீவ்ஸ் விளையாடி வருகிறார்.
வங்கதேசம் சார்பில் ஹாசன் மஹ்மது, டஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். முதல் டெஸ்ட்டில் வென்ற மே.இ. தீவுகள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.