முகப்பு
செய்திகள்

'டிக்கிலோனா' திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியானது

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளிட்டிருக்கிறார்கள். 

Updated On : 30 ஆகஸ்ட், 2021 at 11:19 AM
'டிக்கிலோனா' திரைப்படத்தின் புதிய டிரைலர்
பகிர்:

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளிட்டிருக்கிறார்கள். 

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பலூன் பட இயக்குநர் சினிஷ் தயாரித்திருக்கிறார். நடிகர்கள் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இபபடத்தின் முதல் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அப்படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கரோனா தொற்று காரணமாக வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.