கர்ணன் படத்தின் முதல் பாடல்: அமோக வரவேற்பு
கர்ணன் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று இரவு 8 மணிக்கு வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கர்ணன் திரைப்படத்தின் ''கண்டா வரச்சொல்லுங்க...'' எனும் முதல் பாடல் நேற்று இரவு 8 மணிக்கு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் - நடிகர் தனுஷ் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையினை அமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி ரீலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் நேற்று இரவு 8 மணிக்கு வெளியானது.
கண்டா வரச்சொல்லுங்க... என்று தொடங்கும் பாடல் கிராமிய மணத்துடன் பின்னணியில் தப்பு, தாரை முழங்க கிடக்குழி மாரியம்மாள் உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் வரிகளில் உருவாகியுள்ள பாடல் உணர்வுப்பூர்வமாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.