திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தனுக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுவதாக மருத்துமனை அறிக்கைவெளியிட்டுள்ளது.
திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தனுக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுவதாக மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எம்ஜிஆருக்காக பல புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன். எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிகக் வாழ்ந்திடாதே என்ற பாடல் மிகப் பிரபலம்.
மேலும், 'நான் யார்', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'ஆயிரம் நிலவே வா' என்ற எண்ணற்ற பாடல்களை அவர் எழுதியுள்ளார். வடிவேலு கதாநாயகனாக நடித்த 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் பாடலாசிரியர் புலமைப்பித்தன் கடந்த மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ''உயிர் காக்கும் கருவியின் துணையுடன் கவிஞர் புலமைப்பித்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.