வதந்திக்கு விடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகீலா
தன்னைப் பரவிய வதந்திகளுக்கு விடியோ மூலம் நடிகை ஷகீலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தன்னைப் பரவிய வதந்திகளுக்கு விடியோ மூலம் நடிகை ஷகீலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை ஷகீலா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகளால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தார். சக போட்டியாளர்களும், கோமாளிகளும் அவரை அம்மா என அழைத்து பாசத்தைப் பொழிந்தனர்.
இதையும் படிக்க| சிறப்பு தினத்தில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம்
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. அதனை நான் கேட்டு அதிர்ச்சியானேன். இதோ நான் நலமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை நிறைய பேர் அழைத்து நலம் விசாரித்தார்கள். உங்கள் அன்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. என்னைப் பற்றி தவறான தகவல் அளித்த நபருக்கு நன்றி. அதனால் தான் நீங்கள் என்னை கவனித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க| பிசாசு 2 : முதல் பார்வை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.