FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிலைபெற்றது.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:47 pm IST
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், தொடர்ந்து ஆறாவது வர்த்தக நாளாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது, வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிலைபெற்றது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருகை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் ஆகியவை ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு கூடுதலாக அமைந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.15 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கிய, பிறகு நாள் முழுவதும் ரூ. 95.11 முதல் ரூ. 95.34 என்ற நிலையில் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவடைந்தன.

Advertisement

Advertisement

மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருகையும், இந்திய ரூபாயின் மீட்சிக்கு வித்திட்டது. இதன் மூலம் கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் ரூபாயின் மதிப்பு 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 95.43 ஆக நிறைவடைந்தது.

summary

The rupee strengthened against the US currency for the sixth consecutive session on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments