'ஆட்டோகிராஃப்' பட புகழ் பிரபல பாடகர் கோமகன் காலமானார்
'ஆட்டோகிராஃப்' பட புகழ் பிரபல பாடகர் கோமகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
'ஆட்டோகிராஃப்' பட புகழ் பிரபல பாடகர் கோமகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
'ஆட்டோகிராஃப்' படத்தில் ’'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’' என்ற பாடல் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் பாடகர் கோமகன். இந்த பாட்டில் 'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்..' என்ற வரிகளைப் பாடியிருப்பார்.
பல்வேறு கச்சேரிகளில் பாடிவந்த இவருக்கு இயக்குனர் சேரன் தன்னுடைய படத்தில் வாய்ப்பு வழங்கினார்.
Advertisement
Advertisement
நாகர்கோவிலை பூர்விகமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளியான இவர் சென்னை மாதவரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வந்தார். இசைக்கச்சேரிகளையும் நடத்தி வந்தார்,
பின்னர் சேரன் பட வாய்ப்புக்குப் பிறகு சினிமாவில் ஒரு சில படங்களில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது கச்சேரியும் நடத்தி வந்தார்.
இதனிடையே சென்னை ஐசிஎப்-இல் அரசு வேலை கிடைத்தது. சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
இந்நிலையில் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசிஎப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று நள்ளிரவு 1 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு இயக்குநர் சேரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 'வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்...
அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.