FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது பற்றி..

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:35 pm IST
உச்ச நீதிமன்றம் - file photo
பகிர்:

கண் சிகிச்சைக்காக மூன்று வாரங்கள் வெளிநாடு செல்ல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பல்வேறு வழக்குகள் தொடர்பாக அபிஷேக் பானர்ஜி மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல, அபிஷேக் பானர்ஜி சார்பில் அனுமதி கோரப்பட்டது.

கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி பானர்ஜி தாக்கல் செய்த மனுவை ஒரு வாரத்திற்குள் பரிசீலிக்குமாறு, ஆகஸ்ட் 3 அன்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 5-ஆம் தேதி உத்தரவை எதிர்த்து, டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யான பானர்ஜி தாக்கல் செய்த மனுவை இந்த அமர்வு விசாரித்தது.

மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, அபிஷேக் பானர்ஜி மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் திரும்பி வராமல் போகலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று கோரியது.

ஒவ்வொரு தனிமனிதருக்கும் தனது மருத்துவச் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒரு எம்.பி., அவரது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர் என்று பானர்ஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் தெரிவித்தார்.

வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, உச்ச நீதிமன்றம் அபிஷேக் பானர்ஜியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, அவர் மூன்று வாரங்கள் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது.

In a relief to Trinamool Congress MP Abhishek Banerjee, the Supreme Court on Monday permitted him to travel abroad for three weeks for eye treatment,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments