FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிரிக்கெட்டின் எர்லிங் ஹாலண்ட் அபிஷேக் சர்மா..! வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவின் கொண்டாட்டம் குறித்து...

18 செப்டம்பர் 2026, 12:40 pm IST
அபிஷேக் சர்மா, எர்லிங் ஹாலண்ட். - படங்கள்: பிரீமியர் லீக் இந்தியா, பிசிசிஐ.
பகிர்:

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவின் கொண்டாட்டம் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் போலவே இருப்பதால் சமூக வலைதளத்தில் அந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்று அசத்தியது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். அதில் 30 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனையும் படைத்தார்.

Advertisement

Advertisement

இந்த சதத்தைக் கொண்டாடும் விதத்தில் அபிஷேக் சர்மா களத்திலேயே தியானம் செய்வது போல செய்தார். முதல்முறையாக அவர் இவ்வாறு களத்தில் செய்துள்ளார்.

கால்பந்து உலகில் நார்வே நாட்டைச் சேர்ந்தவரும் மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடுபவருமான எர்லிங் ஹாலண்ட் என்ற வீரரும் இதேபோல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்.

முதலில் இந்தக் கொண்டாட்டத்தை உருவாக்கியதே எர்லிங் ஹாலண்ட் என்பது கவனிக்கத்தக்கது. கிரிக்கெட் மற்றும் கால்பந்து ரசிகர்கள் இந்தக் கொண்டாட்ட புகைப்படங்களை இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

அதிவேகமாக கோல்கள் அடித்து ஹாலண்ட் பல சாதனைகளை படைத்து வருகிறார். ’கிரிக்கெட்டின் எர்லிங் ஹாலண்ட்’ அபிஷேக் சர்மா என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்திய பிரீமியர் லீக் பக்கத்திலும் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

summary

Abhishek Sharma celebrates like footballer Erling Haaland... Photos go viral!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments