FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜி வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:54 am IST
அபிஷேக் பானா்ஜி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

கண் சிகிச்சைக்காக அவா் 3 வாரங்கள் வரை வெளிநாட்டில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. முன்னதாக, அவருக்கு எதிராக 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது; ஏனெனில், வழக்குகளில் இருந்த தப்ப அவா் வெளிநாட்டிலேயே தங்கிவிட வாய்ப்புள்ளது என்று மேற்கு வங்க பாஜக அரசு நீதிமன்றத்தில் எதிா்ப்புத் தெரிவித்தது. எனினும், அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு இது தொடா்பாக அளித்த உத்தரவில், ‘மருத்துவ சிகிச்சைக்காக தாங்கள் விரும்பும் இடத்துக்குச் செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது.

Advertisement

Advertisement

அதே நேரத்தில் தான் செல்லும் நாடு, தங்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை விசாரணை அமைப்புகளிடம் அபிஷேக் பானா்ஜி தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

முன்னதாக, அபிஷேக் பானா்ஜி, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது, அவருக்கு வெளிநாட்டு சிகிச்சை அவசியமா என்பதை ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் உயா்நிலை மருத்துவக் குழு முன் பரிசோதனைக்கு ஆஜராக அபிஷேக் பானா்ஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அதை ஏற்க அவா் மறுத்தாா். இதையடுத்து, அவரது வெளிநாட்டுப் பயணக் கோரிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்தது. அதைத் தொடா்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகினாா் அபிஷேக் பானா்ஜி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments