‘சந்தானம் 15’ முதல்பார்வை வெளியீடு
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளியாகின.
சமீபத்தில் ‘குலு குலு’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவருடைய 15-வது படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்குவார் என அறிவிப்பு வெளியான நிலையில், இன்று அப்படத்தின் முதல்பார்வை தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூரில் நடைபெற்றது. மேலும் சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இசை - அர்ஜுன் ஜன்யா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.