செய்திகள்

3 வருடம் கழித்து ரிலீஸாகும் த்ரிஷாவின் ‘ராங்கி’ திரைப்படம்! 

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே(2002)தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம். பின்னர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். 

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவரது அழகு கூடிக்கொண்டே போனதாக ரசிகர்கள் பாராட்டினர். 

பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன. த்ரிஷா நடிக்கும் புதிய இணையத்தொடர்  படப்பிடிப்பு முடிந்ததாக த்ரிஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. 

லைகா தயாரிப்பில் ஏ.ஆர், முருகதாஸ் கதை எழுத ‘ராங்கி’ எனும் படத்தில் இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் அடுத்த வாரம் டிரைலர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார். 

2019இல் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. தற்போது காலம் தாழ்ந்து டிச.30இல்  இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT