முகப்பு
செய்திகள்

வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லன் இவரா?

வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 24 டிசம்பர் 2022, 8:37 pm IST
பகிர்:

வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த விழாவில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் வாரிசு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார். 

திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும் எனத் தெரிவித்த அவர் நடிகர் விஜய்யின் இன்றைய வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்ப்பதாகக் குறிப்பிட்டு பேசினார்.

கில்லி, வில்லு திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளதால் வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments