முகப்பு
செய்திகள்

செல்வராகவன் இல்லாத புகைப்படம்... என்ன சொல்கிறார் கீதாஞ்சலி?

செல்வராகவனின் டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து அவரது மனைவி கீதாஞ்சலி சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Updated On : 30 டிசம்பர் 2022, 1:27 pm IST
பகிர்:

செல்வராகவனின் டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து அவரது மனைவி கீதாஞ்சலி சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன்  'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின், ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலணி’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.  தற்போது, நடிகராகவும் நடித்து வருகிறார்.

மேலும், செல்வராகவன் டிவிட்டரில் அடிக்கடி வாழ்க்கை சார்ந்த சில கருத்துக்களை பதிவிடுவார். அப்படி சமீபத்தில் “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

இந்தப் பதிவுக்கு சிலர் ‘உண்மைதான்’ எனவும், சிலர்  ‘என்னாச்சி சார், நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா?” எனக் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், இந்தப் பதிவிற்குப் பின் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் புத்தாண்டுக்கான சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில், அவருடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர்.

செல்வராகனுடனான புகைப்படம் எதுவும் பகிரப்படவில்லை. ஆனால், அதேநேரம் “ 2022-ன் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த ஆண்டு வேடிக்கையாக குடும்பத்தினருடன் அற்புதமான கழிகிறது” என பதிவிட்டுள்ளார். இதனால், செல்வராகனுக்கும் கீதாஞ்சலிக்கும் கருத்து வேறுபாடு எதுவும் நிகழவில்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை 2006இல் திருமணம் செய்து 2010-ல் விவாகரத்து செய்தார். பின்,  கீதாஞ்சலி ராமனை 2011இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.