வலிமை திரைப்படக் காட்சிகளை நீக்கிய படக்குழு
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் 14 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் 14 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. நீண்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய இந்தப் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி தமிழக அளவில் 1000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் இத்திரைப்படம் பெற்றுள்ளது.
Advertisement
இந்தத் திரைப்படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு 12.50 நிமிடக் காட்சியை நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 55 நிமிடம் உள்ள இந்தத் திரைப்படத்தின் நாங்க வேற மாறி பாடல் காட்சியும் நீக்கப்பட உள்ளது.
காட்சிகள் நீக்கப்பட்ட படமானது இன்றுமுதல் திரையிடப்பட உள்ளது.
வலிமை திரைப்படத்துக்கு உலக அளவில் முதல் நாளில் ரூ.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், தமிழக அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.