ரஹ்மானின் மகளை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை யார் தெரியுமா ?
ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ரியாஸ் தீன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவிற்கும் ரியாசுதீன் ஷேக் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனையடுத்து கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் ரியாசுதீன் ஷேக் குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க | நடிகர் அஜித்துடன் குக் வித் கோமாளி புகழ் : வைரலாகும் புகைப்படம்
Advertisement
Advertisement
அடிப்படையில் ஆடியோ இன்ஜினியரான ரியாசுதீன் திரைப்படங்களில் ஒலி வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நிறைய படங்களில் அவர் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருவரது நிச்சயதார்த்தமும் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.