’பிசாசு 2’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
இதையும் படிக்க | வெளியானது சந்தானத்தின் ‘குலுகுலு’ டீசர்
Advertisement
Advertisement
பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்-1 ஆம் தேதி நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் 'பிசாசு 2' படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் தற்போது இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் - 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசாசு 2-ல் ஆண்ட்ரியாவுடன் நடிகை பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.