’வாடகைத் தாய் முறை சரிதானா’? சமந்தா பதில்
வாடகைத் தாய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
வாடகைத் தாய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
வாடகைத் தாய் பிரச்னையை முன்வைத்து உருவாகியுள்ள யசோதா திரைப்பட புரமோஷனுக்கான நேர்காணலில் சமந்தாவிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.
நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டாா்.
Advertisement
Advertisement
வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானது. அதை அவா்கள் இருவரும் மறுக்கவில்லை. இந்த விவகாரத்தில் விமா்சனங்கள் எழுந்த நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016-ஆம் ஆண்டிலேயே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 2021 டிசம்பா் மாதம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: ’பிரின்ஸ் தோல்விக்கு அவர்தான் காரணம்..’: தயாரிப்பாளர்
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைக் கூறி வந்தனர்.
இந்நிலையில், யசோதா புரமோசனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம் வாடகைத் தாய் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு சமந்தா, “எனக்கு எதைப் பற்றியும் கருத்துகள் கிடையாது. நீங்கள் எதையாவது மாற்றச் சொன்னால்கூட மாற்றிக்கொள்வேன். என்ன செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதைச் செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.