முகப்பு
செய்திகள்

சூர்யா - ஹரி கூட்டணியில் ‘சிங்கம் 4’?

நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் 4-வது பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 10 நவம்பர் 2022, 3:48 pm IST
பகிர்:

நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் 4-வது பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா  ஹரி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கம் படத்தில் நடித்தார்.  அதிரடியாக உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ’சிங்கம் - 2’ 2013 ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்தது.

பின்னர், சிங்கம் 3 பாகம் வெளியாகி தோல்விப்படமாக அமைந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சிங்கம் படத்தின் 4-வது பாகத்திற்கான கதை விவாதத்தில் இயக்குநர் ஹரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனால், மீண்டும் வெற்றிப்படத்தை கொடுக்க ஹரி தீவிரமாக உள்ளாராம்.

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.