வாத்தி திரைப்பட வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு
நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க | விடுதலை படப்பிடிப்பு நிறைவு?
Advertisement
Advertisement
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் பணிகள் முடிவடையாததால் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியானது .
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி 2023 பிப்ரவரி 17ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.